உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ஹிந்து கடவுள்கள் குறித்து அவதுாறு வைகோ முன்னாள் உதவியாளர் கைது

ஹிந்து கடவுள்கள் குறித்து அவதுாறு வைகோ முன்னாள் உதவியாளர் கைது

தென்காசி : ஹிந்து கடவுள்கள் குறித்தும், வழிபாட்டையும் அவதுாறாக முகநுாலில் பதிவிட்ட ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர். அருணகிரி நீண்ட காலமாக வைகோவின் முதன்மை உதவியாளராக இருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இல்லை.'அருணகிரி சங்கரன்கோவில்' என்ற பெயரில் முகநுாலில் செயல்பட்டு வரும் அருணகிரி, ஹிந்து கடவுள்கள், மத வழிபாடு குறித்தும் அவதுாறாக அதில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசில் நகர ஹிந்து முன்னணி தலைவர் பாடகலிங்கம் புகார் செய்தார். மத வழிபாடு குறித்து அவதுாறாகவும், மற்றவர்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும் பதிவிட்டதற்காக அருணகிரியை போலீசார் கைது செய்தனர். அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி