உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தனியாக துாங்கிய பெண் கழுத்தறுத்து படுகொலை

தனியாக துாங்கிய பெண் கழுத்தறுத்து படுகொலை

பாவூர்சத்திரம்,:தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள பனையடிப்பட்டியை சேர்ந்த பரமசிவன்; சலுான் கடை வைத்துள்ளார். இவரது மனைவி உமா, 37. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று காலை பரமசிவன் டீக்கடைக்கு சென்றார். அவரது இரு மகன்களும் வீட்டின் மேலே உள்ள அறையில் துாங்கினர். உமா மட்டும் கீழே துாங்கினார். உமா தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர், கத்தியுடன் வீட்டினுள் புகுந்து உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினார். கடைக்கு சென்ற பரமசிவன் வீடு திரும்பி வந்து பார்த்த போது, உமா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், கொலையாளி பயன்படுத்திய கத்தியை, வீட்டிலிருந்து சிறு துாரத்தில் உள்ள கிணற்றில் போட்டு சென்றது தெரியவந்தது. போலீசார் அதை கைப்பற்றி, சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை