மேலும் செய்திகள்
ரூ.500 தகராறில் நண்பரை கொலை செய்த இருவர் கைது
12-Aug-2025
தென்காசி; நண்பரை கத்தியால் குத்திக்கொலை செய்த கால்நடை டாக்டர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தென்காசி அடுத்த அய்யாபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; கட்டட தொழிலாளி. இவரது நண்பர்கள் திருமலை குமார், 48, விக்னேஷ், 63. மூவரும் நேற்று மாலை மது அருந்திய போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, செந்தில் குமார் மற்றவர்களை அவதுாறாக பேசிஉள்ளார். ஆத்திரமுற்ற திருமலைகுமார், விக்னேஷ் சேர்ந்து செந்தில்குமாரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் அவர் இறந்தார். திருமலைகுமார், ஓய்வு பெற்ற கால் நடை மருத்துவர் விக்னேஷ் ஆகியோரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.
12-Aug-2025