உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நடிகையை கண்டித்து காளையுடன் ஆர்ப்பாட்டம்

நடிகையை கண்டித்து காளையுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரிய எம்.பி.,யும், நடிகையுமான ஹேமாமாலினியை கண்டித்து தஞ்சையில், மாவட்ட தமிழர் வீரவிளையாட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தரக்குறைவாக பேசியும், அதனை தடை செய்யக்கோரிய நடிகை ஹேமமாலினி எம்.பி.,யை கண்டித்தும், தஞ்சை மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் முன், மாவட்ட தமிழர் வீரவிளையாட்டு பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரவையின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன், செல்வம், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஜல்லிக்கட்டுக்காளைகளுடன் வந்த பேரவையினர், நடிகையும், எம்.பி.,யுமான ஹேமமாலினிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை