உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / லாரி மோதி மாணவன் பலி

லாரி மோதி மாணவன் பலி

கும்பகோணம்: கும்பகோணம் அண்ணலக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் சிவராமன்(11). இவர் கும்பகோணத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்து øகிளில் சிவராமன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே வந்தபோது, கரூரில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கொல்லுமாங்குடியில் ஜல்லியை இறக்கி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவராமன் மூளை சிதறி பரிதாபமாக செத்தார். கும்பகோணம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சாமிநாதன் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை