மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில், 1,000 ஆண்டுகள் பழமையான மச்சபுரீஸ்வரர் கோவிலின் தெற்கு மட வளாகம் அருகே முகம்மது பைசல், 43, தனக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார்.அப்போது 5 அடிக்கு மேல் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிய போது, மண்ணுக்குள் சுவாமி சிலைகள் இருப்பது தெரிந்தது. தகவலறிந்த பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் மற்றும் போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தனர்.அப்போது. அம்மனுடன் கூடிய சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், நடன திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர், திருநாவுக்கரசர், அபிராமி அம்மன், சிவகாமி அம்மன், விநாயகர், கல்யாண சுந்தரேஸ்வரர், தனி அம்மன் உட்பட 13 ஐம்பொன் சிலைகள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் கெண்டி, மணி, கூஜா, சங்குஉள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் சிலைகளை பார்வையிட்டார். மீட்கப்பட்ட சிலைகள் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகத்தின் தமிழ் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் கூறுகையில், ''நால்வர், சோமாஸ்கந்தர், அம்மன் உட்பட சிலைகள் வடிவமைப்பு அடிப்படையில், அனைத்தும் சோழர்கள் காலத்தை சேர்ந்தவையாக உள்ளன.சிலைகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் தொல்லியல் துறை அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025