உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஹால் டிக்கெட் இல்லை; 19 மாணவர்கள் பரிதவிப்பு

ஹால் டிக்கெட் இல்லை; 19 மாணவர்கள் பரிதவிப்பு

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவியர் என, 19 பேர் 10ம் வகுப்பு படிக்கின்றனர். சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு இன்று நடைபெறும் நிலையில், நேற்று முன்தினம் இரவு வரை இவர்களுக்கு 'ஹால் டிக்கெட்' வழங்கவில்லை. மாணவர்கள், பெற்றோர் பள்ளியில் விசாரித்த போது, பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேர்வு எழுத முடியாது என தெரிந்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோருடன் நேற்று கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து முறையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை