மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில், 'சன் கபே' என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு நேற்று நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரைச் சேர்ந்த சண்முகம், 60, அவரது மனைவி ஹேமலதா, 56, உறவினர் சணல்மேரி, 70, ஆகிய மூவரும் உறவினரின் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, தங்களது ஊருக்குச் செல்வதற்காக, சாப்பிட்டு கொண்டிருந்தனர்.அப்போது திடீரென ஹோட்டலின் மேற்கூரையின் காரை, பெயர்ந்து விழுந்தது. இதில், சண்முகம், ஹேமலதா, சணல்மேரி மூவரும் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். பஸ் ஸ்டாண்டின் கட்டடம் மிகவும் பழமையானது என்பதால், மழையில் ஊறி காரை பெயர்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் பஸ் ஸ்டாண்ட் கட்டடம், பல இடங்களில் சேதமடைந்து இருப்பதாக பயணியர் வேதனை தெரிவித்துள்ளனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025