மேலும் செய்திகள்
அலகுமலை ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பு
08-Feb-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியைச் சேர்ந்த இசையாஸ் - மேரி கிரேஸி தம்பதியின் மூன்றாவது மகன் திரன்பெனடிக்ட், 15, வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார்.நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்று விட்டு, இவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்த போது, அற்புதாபுரம் பகுதி தோப்பு ஒன்றில், கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முயற்சி செய்தார். அப்போது, அந்த மாடு அவரின் மார்பில் குத்தியது. இதில், படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையே என நினைத்து, இவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது தான், ஜல்லிக்கட்டு காளை முட்டியதில், இறந்து விட்டதும், அவரது உடல் மருத்துவமனையில் இருப்பதும் தெரிந்தது.இந்நிலையில், தஞ்சாவூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மாணவனின் தாய் மேரி கிரேஸி அளித்த மனுவில், 'அற்புதாபுரம் பகுதியில், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. அதன் உரிமையாளர், மாட்டிற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் என் மகனிடம், 'மாட்டை அடக்கினால், 250 ரூபாய் தருகிறேன்' எனக் கூறியுள்ளார்.'பணத்திற்கு ஆசைப்பட்டு காளையை அடக்க முயன்ற போது, காளை மாடு முட்டி என் மகன் இறந்து விட்டார். என் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது. வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Feb-2025