உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சையில் பணம் பட்டுவாடா தி.மு.க., நிர்வாகிகள் கைது

தஞ்சையில் பணம் பட்டுவாடா தி.மு.க., நிர்வாகிகள் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், செக்கடித் தெருவில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக மூன்று பேரை, மேற்கு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்கள், தி.மு.க.,வினர் என்பதால், போலீசார் அவர்களை விடுவிக்க முயன்றதாக தகவல் பரவியது. இதையடுத்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமநாதன் மயிலாடுதுறை அ.தி.மு.க., வேட்பாளர் பாபுவின் தந்தையும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்தனர்.இதையடுத்து, அ.தி.மு.க.,வினர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மொபைலில் தகவல் அளித்தனர். அதன் பின், பிடிபட்ட 25வது வார்டு தி.மு.க., துணைச் செயலர் சிவக்குமார், 45, வார்டு பிரதிநிதி பார்த்திபன், 50, வார்டு துணைச் செயலர் கார்த்திகேயன், 42, ஆகியோரிடம் இருந்த 16,200 ரூபாயை பறிமுதல் செய்து, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அதுபோல, பாபநாசம் அருகே வீரமாங்குடியில், வாக்காளர்களுக்குப் பணம் வழங்க வைத்திருந்த 7,400 ரூபாயை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோகநாதன் என்பவரை கபிஸ்தலம் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ