| ADDED : ஜூலை 13, 2024 10:03 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 70, அரிசி ஆலை உரிமையாளர். இவரது மனைவி நீலா, 65, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு டூ - வீலரில், சந்தைக்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் டூ - வீலரில் இருந்து கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும், நீலா தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அய்யம்பேட்டை அருகே செல்லும் வழியில் இறந்தார்.விபத்து ஏற்படுத்திய பாலாஜி, 28, என்பவரை, திருவிடைமருதுார் போலீசார் கைது செய்தனர்.