மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் தடுப்பு இல்லாமல் கட்டிய கழிப்பறை!
3 hour(s) ago
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
05-Oct-2025
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
தஞ்சாவூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணை நேற்று முன்தினம் டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்க தயாராகி வருகின்றனர்.அதுபோல, தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் கிராமத்தில், விவசாயிகள் ஒன்றிணைந்து அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், தங்கள் சொந்த செலவில், 'பொக்லைன்' மூலம் கத்திரி குழி என்ற பாசன வாய்க்காலை, கடந்த இரண்டு நாட்களாக துார்வாரி வருகின்றனர்.இது குறித்து, கள்ளபெரம்பூரைச்சேர்ந்த விவசாயி குமாரவேல் கூறியதாவது:மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு வாரங்களில் எங்களது பகுதிக்கு வந்து சேரும். எங்களுக்கு வெண்ணாறு பாசனம் மூலம் நாங்கள் சாகுபடியை செய்கிறோம். ஏற்கனவே 'ஏ, பி' பிரிவு வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ள நிலையில், எங்களது ஊரில் 'சி, டி' பிரிவு வாய்க்கால்கள் துார்வாராமல் உள்ளன. அந்த வாய்க்கால்களை துார்வாரினால் தான் வயல்களுக்கு விரைந்தும், சீராகவும் தண்ணீர் பாயும்.இதனால், அரசை எதிர்பார்த்து காத்திருக்காமல், உடனடியாக நாங்களே களத்தில் இறங்கி, இரண்டு நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம், 20,000 ரூபாய் செலவு செய்து, 500 மீட்டர் துாரத்திற்கு துார்வாரி வருகிறோம்.இந்த வாய்க்கால் துார்வாரப்பட்டுள்ளதால், எங்கள் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்துக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago
05-Oct-2025
01-Oct-2025
29-Sep-2025