உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கட்டளை கால்வாயில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கட்டளை கால்வாயில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்:விவசாயிகள் சங்கம் மற்றும் கட்டளை கால்வாய் பாசன விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ஆகஸ்ட் 6ல் உறுதியளித்தபடி, 15 நாட்களில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் நிரப்பப்படவில்லை.இதையடுத்து, அதிகாரிகளை கண்டித்து, விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் கண்ணன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில், கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சாவூர் தி.மு.க., - எம்.பி., முரசொலி, “இன்னும், 10 நாட்களில் ஏரிகளில் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார். அதனால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை