உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடமுருட்டி ஆற்றில் சாரம் சரிந்து ஒருவர் பரிதாப பலி

குடமுருட்டி ஆற்றில் சாரம் சரிந்து ஒருவர் பரிதாப பலி

அய்யம்பேட்டை:தஞ்சாவூர் மாவட்டம், மாத்துார் --- ஒத்தைக்கடை இடையே உள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே 9 கோடி ரூபாயில் பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு தொழிலாளர்கள் தங்கி, இரவு - பகலாக பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர். இதில், திருவாரூர் மாவட்டம் ராயபுரத்தைச் சேர்ந்த ராமன், 55, என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், நான்கு பேரை அங்குள்ளவர்கள் மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, அய்யம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்