உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது

அழுக்கு துணியில் ரூ.5 லட்சம்: நகராட்சி கமிஷனர் காரில் சிக்கியது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட அனைத்துக்கும் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், லஞ்ச பணத்தை முக்கிய பொறுப்பில் உள்ள பலரும் பிரித்து எடுத்துக் கொள்வதாகவும் புகார் எழுந்தது.இதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியில் இருந்து நேற்று காலை 6:00 மணி வரை, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய குழுவினர், நகராட்சி அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

துாக்கி வீசினார்

உதவி பொறியாளர் மனோகரன் மறைத்து வைத்திருந்த, கணக்கில் வராத, 80,000 ரூபாய், லஞ்சம் கொடுப்பதற்காக நின்ற கான்ட்ராக்டர் எடிசனிடம் இருந்து, 66,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் நகராட்சி கமிஷனர் குமரனின் கார் டிரைவரான வெங்கடேஷன், நகராட்சி அலுவலக சுற்றுச்சுவருக்கு வெளியே 8,000 ரூபாயை துாக்கி வீசியுள்ளார். அவர் வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர்.

வீட்டிலும் சோதனை

அவரிடம் நடத்திய விசாரணையில், கமிஷனர் குமரன், அழுக்கு துணியை ஒரு பையில் வைத்து, அதில் தான் பெற்ற 5 லட்சம் ரூபாயை மறைத்து வைத்து, பணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.அதன்படி, காரில் இருந்த பையை சோதனை செய்த போது, அழுக்கு துணியில் மறைக்கப்பட்டிருந்த பணம் சிக்கியது. கமிஷனர், உதவி பொறியாளர், டிரைவர் உள்ளிட்டோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத 6.54 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், கான்ட்ராக்டர் எடிசன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Raj
ஆக 11, 2024 06:57

பட்டா உடனடியாக கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பத்தாயிரம் வாங்கிட்டு தான் கொடுக்கிறார்கள்.


s sambath kumar
ஆக 10, 2024 11:01

பெருச்சாளிகள் மாட்டாது. சுண்டெலிகள் மட்டுமே மாட்டும். ஐயோ பரிதாபம்.


Chandrasekaran Balasubramaniam
ஆக 10, 2024 09:54

இதேபோல் தினமும் நாட்டின் எல்லா இடங்களிலும் சோதனை செய்யுங்க. கணக்கிற்கு ஒரு நாள் மட்டும் வேலை செய்யாதீங்க.


Chandrasekaran Balasubramaniam
ஆக 10, 2024 09:51

நாள்தோறும் சோதனை செய்யுங்க அதுக்கு தானே உங்களுக்கு சம்பளம் எங்க வரிப்பணத்தில். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் சோதனை செய்யுங்க தினமும். கணக்குக்கு ஒரு நாள் மட்டும் சோதனை செய்யுறீங்க.


Narayanasamy
ஆக 05, 2024 11:23

6லடச்ம்×30=180 லட்சம்.வாழ்க.


aaruthirumalai
ஆக 04, 2024 11:14

தண்டனை என்னான்னு முதல்ல சொல்லுங்க


அப்பாவி
ஆக 04, 2024 07:43

இவிங்களுக்கு பதில் நாலு திருடன், ஜேப்படிக்காரன், தீவட்டி கொள்ளைக் காரங்களை பணியில் நியமித்திருக்கலாம். திருட்டு திராவிடனுங்க.


Ms Mahadevan Mahadevan
ஆக 04, 2024 07:38

நகராட்சி அலுவலகம், மின் வாரியம், பதிவு துறை அலுவலகம், RTO அலுவலகம் இங்கெல்லாம் சாமானியர்கள் மூச்சு விட்டாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.. அலுவலர்கள் பொதுமக்களை மதிக்காமல் பேசுவார்கள். ரமணா பட மாதிரி எந்தனை வந்தாலும் திருந்தாத கேடு கெட்ட பிச்சைக்கார பிறவிகள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ