மேலும் செய்திகள்
சிறுமிக்கு தொல்லை டிரைவருக்கு போக்சோ
27-Dec-2025
பைக்குகள் மோதி 2 வாலிபர்கள் பலி
15-Dec-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கோவிலுார் கள்ளிமேடு பகுதியை சேர்ந்த சின்னப்பா இவரது மனைவிகள் செல்வராணி, 55, ராணி, 54. இருவரும் சகோதரிகள்.செல்வராணியின் பேரன் ஹரிஹரன்,10, செல்வராணி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்இரவு கல்வி சுற்றுலா செல்வதற்காக, ஹரிஹரனைவீட்டிலிருந்து பஸ்சில் ஏற்றி விடுவதற்காக, செல்வராணியும், ராணியும் நடந்து அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற கார் செல்வராணி மற்றும் ராணி மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராணி, ராணி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் விபத்தில் காயமடைந்த ஹரிஹரனை அங்கிருந்தோர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
27-Dec-2025
15-Dec-2025