உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்

சிதம்பரம் அருகே கார் விபத்து கேரளாவை சேர்ந்த 10 படுகாயம்

சிதம்பரம் : சிதம்பரம் அருகே கார் பள்ளத்தில் கவிழந்த விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.கேரளாவை சேர்ந்த10 பேர் கொண்ட, செண்ட மேளம் குழுவினர், கடலுாரிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றனர். நேற்று மதியம் சிதம்பரம் அருகே மணலுார் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 10 பேரும் காரில் சிக்கிக் கொண்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ௧08 ஆம்புலன்ஸ் மூலம், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர்கள் கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த டிரைவர் ரஞ்சித் 21; திருச்சூர், பாலக்காடு பகுதியை சேர்ந்த அபிஷேக், 21; ஸ்ரீநாக், 21; நவீன், 19; சக்திதராஜ், 20; அபினவ்,17; ஆல்டரின், 17; மாயா, 34; அதுல் கிருஷ்ணா, 28; ஸ்ரீ ஹரி, 19: ஆகியோர் எனத் தெரியவந்தது.சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி