உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 14 வயது சிறுமி கர்ப்பம்

14 வயது சிறுமி கர்ப்பம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கவியரசன், 24; ஐ.டி.ஐ., முடித்துவிட்டு வீட்டில் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி, கவியரசன் பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி, தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். சிறுமியின் பெற்றோர், தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ், கவியரசனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை