உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / சிறுமிக்கு தொல்லை  17 வயது சிறுவன் கைது 

சிறுமிக்கு தொல்லை  17 வயது சிறுவன் கைது 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் இரண்டாம் வகுப்பு படிக்கும், 7 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களாக சிறுமியின் வீட்டிற்கு வந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.நேற்று முன்தினம், சிறுமி வீட்டில் இருந்த போது, மீண்டும் வந்த சிறுவன், பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொல்லை அளித்துள்ளார்.இதையறிந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.ஆடுதுறை அனைத்து மகளிர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கவிதா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அந்த சிறுவனை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை