| ADDED : ஜூன் 12, 2024 05:40 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த போலீசார் பாக்கியரதி, மகாலெட்சுமி ஆகியோர், சில நாட்களாக பணிகள் தொடர்பாக பிரச்னை இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பணியில் இருந்த பாக்கியரதிக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஒருவொருக்கு ஒருவர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே, பயங்கரமாக அடித்துக் கொண்டனர்.இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு ஏ.எஸ்.பி., சகுனாஸ், இரு தரப்பிலும் விசாரித்தார். பிறகு பாக்கியரதியை திருவோணம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மகாலெட்சுமியை ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணியிட மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டார்.