உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இளம்பெண் உறவினர்கள் 3 பேர் கைது

இளம்பெண் உறவினர்கள் 3 பேர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்விடுதியைச் சேர்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா,19, பூவாளூரைச் சேர்ந்த, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நவீன், 19, என்பவரை, டிச., 31ல் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர்கள் பல்லடம் போலீசில் புகார் செய்து, ஐஸ்வர்யாவை மட்டும் ஜனவரி 2ல் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். 3ம் தேதி, ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கொலை செய்து, எரித்து விட்டதாக, போலீசில் நவீன் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரை ஏற்கனவே கைது செய்தனர். உடந்தையாக இருந்த பெருமாளின் உறவினரான சின்னராசு, 30, திருச்செல்வம், 39, முருகேசன், 34, ஆகிய, மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி