உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 200 ஆண்டு கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

200 ஆண்டு கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

தஞ்சாவூர்:புன்னைநல்லுாரில், 200 ஆண்டுகள் பழமையான முருகன் கோவிலில், மூன்று ஐம்பொன் சிலைகளும், ஒரு வெண்கல கலசமும் கொள்ளையடிக்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில் பகுதியில், 200 ஆண்டு பழமையான பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, பூசாரி சதீஸ் குமார், 37, கோவிலை பூட்டி சென்றார். நேற்று காலை, 8:45 மணிக்கு கோவிலை திறக்க வந்த போது, முன்பக்க கிரில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. சதீஸ்குமார் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, கிரில் கதவு போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்னேகால் அடி உயர முருகன் சிலை, தலா, ஒரு அடி உயர வள்ளி - தெய்வானை ஐம்பொன் சிலைகள், வெண்கல கலசம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது. தஞ்சாவூர் தாலுகா போலீசார், தடயவியல் நிபுணர்கள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள், வெல்டிங் மிஷின் மூலம் கிரில் கதவை உடைத்து, சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி