மேலும் செய்திகள்
மத்திய அரசு கடன் : எம்.பி., கேள்வி
20-Aug-2025
தஞ்சாவூர்; கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவானதால், அவரது தம்பியை வெட்டி கொலை செய்த பா.ஜ., பிரமுகரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மேட்டுவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 37; பேராவூரணி வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவரிடம், பட்டுக்கோட்டை அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சக்திவேல், 38, என்பவர், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடனை திருப்பி தராமல், ஒன்றரை ஆண்டுகளாக சக்திவேல் இழுத்தடித்தார். நேற்று முன்தினம் இரவு, ராஜேஷ்குமார், சக்திவேல் வீட்டுக்கு சென்ற போது, அவர், தன் தாயுடன் தலைமறைவானது தெரிந்தது. இதையடுத்து, 20 நாட்களுக்கு முன், வெளிநாட்டில் இருந்து வந்த சக்திவேலின் கடைசி தம்பி பிரகதீஸ்வரன், 29, மட்டும் வீட்டில் இருந்து உள்ளார். அவரிடம், சக்திவேல், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும் என, ராஜேஷ்குமார் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், மறைத்து வைத்திருந்த அரிவாளால், பிரகதீஸ்வரனை வெட்டி கொலை செய்து, வாட்டாத்திகோட்டை போலீசில் சரணடைந்தார். போலீசார் ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.
20-Aug-2025