உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நடு ரோட்டில் சண்டை போட்ட பஸ் ஊழியர்கள் மீது வழக்கு

நடு ரோட்டில் சண்டை போட்ட பஸ் ஊழியர்கள் மீது வழக்கு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி, சண்டை போட்ட பஸ் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கும்பகோணத்தில் இருந்து, நேற்று காலை, இரண்டு தனியார் பஸ்கள் பயணியரை ஏற்றிக் கொண்டு, தஞ்சாவூருக்கு வந்தன. பொது மக்களையும், வாகன ஓட்டிக்களை அச்சுறுத்தும் விதமாக போட்டி போட்டு பஸ்களை வேகமாக ஓட்டினர். தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வரும்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதில், காலை 7: 50 மணிக்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில், பஸ்களை நிறுத்தி வைத்துக் கொண்டு, டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவெருக்கு ஒருவர் அடித்துக் கொண்டனர். இந்த சம்பவத்தால், பயணிரும், அங்கிருந்தவர்களும் அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு, டிரைவர்கள் பஸ்சை எடுத்துச் சென்றனர். இது குறித்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை போலீசார், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை