உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சாவூரில் கம்பராமாயண  பாராயணம் மத்திய அமைச்சர்கள், கவர்னர் பங்கேற்பு 

தஞ்சாவூரில் கம்பராமாயண  பாராயணம் மத்திய அமைச்சர்கள், கவர்னர் பங்கேற்பு 

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், தென்னகப்பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற உள்ள கம்பராமாயண பாராயணம் நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் கவர்னர் ரவி உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.தஞ்சாவூர், தென்னகப்பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், கி.பி., 12-13 நுாற்றாண்டுகளில், வால்மீக ராமாயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்பராமயணம் சிறப்பான கலாசாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம், தேரெழுந்துாரில் உள்ள கம்பர்மேடு என்ற பகுதியில், உள்ளூர் கம்பராமாயண குழுக்களால் நடத்தப்பட்டு வந்த, தமிழ் கம்பராமாயண பாராயணம் காலபோக்கில், குறைய தொடங்கி விட்டது.தற்போது, புதிய தலைமுறையினர், கம்பன் காவியத்தில் போதிய ஈடுபாடு காட்டாததால், தமிழ் கம்பராமாயணம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மீண்டும் இத்தகைய கம்ப ராமயணத்தின் கலாசாரத்தை மீட்டுருவாக்கும் வகையில், இந்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தஞ்சாவூரில், தென்னகப் பண்பாட்டு மையம் கம்பராமயண பாராயணத்தை நடத்த உள்ளது.இதையடுத்து வரும், 18ம் தேதி, மாலை 6:00 மணிக்கு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், சிங்கர் கோவில் கலையரங்கில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், கம்பராமயண பாராயணத்தை துவக்கி வைக்கிறார்.கம்பராமாயண கழகங்களைக் சேர்ந்தோரின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில், வசன கவியுடன் கூடிய சீதா கல்யாண நாட்டிய நாடகமும் நடைபெற உள்ளது.தொடர்ந்து, மார்ச் 20 முதல் 29ம் தேதி வரை, தமிழகத்தில் பல பகுதிகளில், கம்பராமாயண பாராயாணம் நிகழ்ச்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 30 முதல் ஏப்., 6ம் தேதி வரை, கம்பர் பிறந்த கம்பர்மேட்டில், கம்பராமாயணம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னரும்,தென்னகப் பண்பாட்டு மைய தலைவருமான ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கம்பராமாயண நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

naranam
மார் 16, 2025 23:56

தீய muqa பலூன் பட்டம் பறக்க விடலாம். ஆனால் அந்த அம்மா இதற்கெல்லம் சளைத்தவர் அல்ல.


Balasubramanian
மார் 16, 2025 18:10

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கெணுமே பிறந்ததில்லை என்று பாடிய பாரதியார் கம்பனை முன் வைத்த காரணத்தை மூன்றையும் படித்தவர்களே உணர முடியும்! காவிய ரசமும் பக்தி பரவசமும் மேலும் தமிழ் மொழியில் வழங்கும் அனைத்து இலக்கணமும் ஒருங்கிணைந்த ஒப்பில்லா நூல் அது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை