உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியையர் மாற்றம்

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியையர் மாற்றம்

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், அக்., 21ம் தேதி, நான்காம் வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருந்ததால், இரண்டாம் வகுப்பு ஆசிரியரிடம் நான்காம் வகுப்பையும் கவனிக்கும்படி, தலைமை ஆசிரியர் கூறியிருந்தார். அவர், இரண்டாம் வகுப்பில் இருந்ததால், நான்காம் வகுப்பு மாணவர் ஒருவரிடம், மாணவர்களை பேசாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறி உள்ளார். அதையும் மீறி பேசிய நான்கு மாணவர்களின் வாயில், 'செல்லோ டேப்' ஒட்டியதாக கூறப்படுகிறது. அதை ஆசிரியை ஒருவர், தன் மொபைல் போனில் படம் எடுத்தார். சமீபத்தில், பெற்றோரின் மொபைல் போன்களுக்கு, அந்த படங்கள் சென்றன. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியை, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் அளித்தனர்.இதையடுத்து, மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்தி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை புனிதா, ஆசிரியையர் முருகேஸ்வரி, பெல்சி இமாகுலேட் கிறிஸ்டி ஆகியோரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி