மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கி மரணம்
26-Aug-2024
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியாற்றில் மூழ்கி, 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (15), பிரவீன் (14) ஆகிய இருவரும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
26-Aug-2024