உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஆசிரியர் கவுன்சலிங் இயக்குனர் ஆய்வு

ஆசிரியர் கவுன்சலிங் இயக்குனர் ஆய்வு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடந்த ஆசிரியர் பணிமாறுதல் கவுன்சிலிங்கை, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டத்தில் நகராட்சி, பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கவுன்சிலில் தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது. முதல்நாள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 8 பேருக்கு மாறுதல் ஆணை, 11 பேருக்கு பதவி உயர்வு ஆணையும், பட்டதாரி ஆசிரியர்கள் 22 பேருக்கு மாறுதல் ஆணையும், 37 பேருக்கு பதவி உயர்வு ஆணை என மொத்தம் 78 பேருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் நாளாக, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சக்திவேல் தலைமையில் நடக்கும் கவுன்சிலிங்கை, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் முத்துபழனிச்சாமி ஆய்வு செய்தார். பல்வேறு பிரிவுகளில் நாளை வரை தொடர்ந்து கவுன்சிலிங் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி