தஞ்சாவூர்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம்,
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மத்திய அரசு அமைச்சகம் சார்பில்
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப்டம்பர் 25ம் தேதி முதல் அக்டோபர்
நான்காம் தேதி வரை திருச்சி, உதயம், சமுக சேவை மாணவர் விடுதி அருகில்,
கண்டோன்மெண்ட், திருச்சி என்ற முகவரியிலும், தஞ்சாவூர் கூNஎOக்கட்டிடம் எண்
22அ, புது ஆற்றுப்பாலம்சாலை (பயணியர் விடுதி அருகில்) தஞ்சாவூர் குறு,
சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம், குறு, சிறு மற்றும்
நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் இந்திய அரசு அலுவலகத்தில் துவங்க உள்ளது.இப்பயிற்சி நவீன முறையான டச் ஆசிட் முறையில் கற்றுக்கொடுக்கப்பட்டு, இந்திய
அரசின் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி
முடித்தவர்கள் சுய தொழிலாக நகை அடகு கடை மற்றும் வியாபாரம் செய்யவும்,
நாட்டுடமை வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறவும்
உதவும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் ஐந்தாயிரம் மட்டும். எஸ்.சி.,
எஸ்.டி., பி.எச்., பிரிவினர்களுக்கு ரூபாய் 50 சதவீதம் கட்டண சலுகை உண்டு.
இப்பயிற்சி பற்றிய மேலும் விவரங்களுக்கு ''துணை இயக்குனர் (உலோகவியல்)இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிலையம்,
65/1, எகுகூ ரோடு கிண்டி, சென்னை - 600-032. தொலை பேசி எண்:
04422500765,-22501011/12/13 மொபைல் எண்: 9444555549, 9962362993 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.