உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / குடந்தையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

குடந்தையில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் திடீர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் : தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கும்பகோணத்தில் மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கும்பகோணம் கடலங்குடித் தெருவில் உள்ள தனியார் மருந்து மொத்த வியாபார முகவர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கும்பகோணம் கிளை தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுரு பேசினார். கிளைச் செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிஎப்எல் என்ற தனியார் மருந்து தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் விற்பனை பிரதிநிதிகளின் உரிமைகளை பறிப்பதோடு, பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை