மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதியில் உள்ள நகைக்கடையில் திருநங்கையர் சிலர் அன்பளிப்பு வாங்க நேற்று முன்தினம் வந்தனர். காவலாளி, உள்ளே விடவில்லை.திருநங்கையருக்கும் காவலாளிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், சமாதானம் செய்து திருநங்கையரை அனுப்பி வைத்தனர். மதியம் மீண்டும் நகைக்கடைக்கு அந்த திருநங்கையர், தகராறு செய்தனர்.தகவல் அறிந்து போலீசார் வந்தனர். திருநங்கையரை சமரசம் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். டி.எஸ்.பி., கீர்த்திவாசன் திருநங்கையரிடம் பேசிக் கொண்டு இருந்தார்.அப்போது, போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே, திருநங்கை இனியா, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, சாலையில் படுத்தவாறு போலீசைக் கண்டித்து கோஷமிட்டபடி தீக்குளிக்க முயன்றார்.அதிர்ச்சியடைந்த போலீசார் திருநங்கை மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து அனுப்பினர். இந்த சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025