ஆட்டோ டிரைவருக்கு காப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார், 32, ஆட்டோவில், 17 வயது சிறுமி, நீட் தேர்வுக்கான பயிற்சி நிலையத்திற்கு, ஏப்ரலில் சென்று வந்துள்ளார். சிறுமியை தன் மொபைல் போனில் போட்டோ எடுத்து வைத்த சுரேஷ்குமார், திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியதுடன், அவ்வப்போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி புகாரில், தஞ்சாவூர் மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.