உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மனைவி மீதான ஆத்திரத்தில் டாக்டரை தாக்கியவர் கைது

மனைவி மீதான ஆத்திரத்தில் டாக்டரை தாக்கியவர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் கரிகாலன், 42. சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் கரிகாலனுக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, வார்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.கரிகாலன் தன் கையில் உள்ள ஊசி செலுத்தும் வென்ப்ளானை கழட்டி வீசியுள்ளார். அப்போது, ஊசி செலுத்த சென்ற பெண் பயிற்சி டாக்டர் ஒருவர், வென்ப்ளானை கழட்டியது குறித்து கரிகாலனிடம் கேட்டு விட்டு, அவருக்கு ஊசி செலுத்தி திரும்பினார்.தொடர்ந்து, இரவு மீண்டும் ஊசி செலுத்த பெண் பயிற்சி டாக்டர் சென்ற போது, கரிகாலன் தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மீண்டும் கையில் இருந்த வென்ப்ளானை கழட்டி இருந்தார்.இது குறித்து, பெண் பயிற்சி டாக்டர், கரிகாலனிடம் எச்சரிக்கை செய்தார். தன் மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த கரிகாலன், பயிற்சி டாக்டரை தகாத வார்த்தையில் பேசி, அவரது கன்னத்தில் அறைந்தார். இது குறித்து, டாக்டர், மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனிடம் தகவல் அளித்தார். அவரின் உத்தரவில், பயிற்சி டாக்டர், மருத்துவ கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தார்.கரிகாலன் மீது மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில், நேற்று வழக்கு பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி