உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்

நாட்டு வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கியவர் சிக்கினார்

நெய்வேலி:தஞ்சாவூர் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகளை தயாரிக்க, வெடி மருந்துகளை தோப்பில் பதுக்கி வைத்திருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், நெய்வேலி தென்பாதி கிராமத்தில், கடந்த, மே, 18ம் தேதி, நாட்டு வெடி தயாரிப்பின் போது ஏற்பட்ட விபத்தில், முகமது ரியாஸ், சுந்தரராஜன் இறந்தனர். இதையடுத்து, அனைத்து தாசில்தார்களும் மாவட்டம் முழுதும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நெய்வேலி வடபாதியைச் சேர்ந்த சந்திரா என்பவருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில், நாட்டு வெடி மூலப்பொருட்கள் இருப்பதாக கிடைத்த தகவலில், தாசில்தார் சுந்தரமூர்த்தி சோதனை செய்தார். அப்போது, பிளாஸ்டிக் பேரலில், நாட்டு வெடி தயாரிப்பதற்கான வெடி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து, நெய்வேலியை சேர்ந்த முனியய்யா, 62, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை