உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்; 5 பேர் பயன்

 மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம்; 5 பேர் பயன்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் வசந்த்,19. இவர் கடந்த டிச.23ம் தேதி இரவு, சுவாமிமலை பகுதியில், பைக்கில் சென்ற போது, தவறி விழுந்து காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக, கடந்த டிச.24ம் தேதி அனுமதிக்கப்பட்ட சூழலில், நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது குறித்து வசந்த் தந்தை சண்முகத்துக்கு டாக்டர்கள் எடுத்துரைத்தனர். பிறகு, குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில், வசந்த் இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், சிறுகுடல், தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், கல்லீரல் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. வசந்தின் உடலுக்கு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் பூவதி உள்ளிட்டோர், அரசுமரியாதை செய்தனர். இந்த தானத்தின் மூலம் ஐந்து நபர்கள் பயன் பெற்றதால், வசந்த் குடும்பத்தினர் துக்கம் கலந்த ஆறுதலுடன் உடலை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ