4 சிறுமியருக்கு தொல்லை கொத்தனாருக்கு போக்சோ
தஞ்சாவூர் : நான்கு சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடியைச் சேர்ந்தவர் சக்திவேல், 41; கொத்தனார். இவர், தன் வீட்டு வளாகத்தில், கடந்த ஆண்டு நவம்பரில் விளையாடிக் கொண்டிருந்த, 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இந்நிலையில், சிறுமியர் படித்த பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தபோது, திடீரென சிறுமியர் நால்வரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தனர். இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். இதில், சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. சக்திவேலை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.