உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கூட்டு பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்கு மறுப்பு: அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

கூட்டு பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்கு மறுப்பு: அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.தஞ்சாவூரில் 23 வயது இளம்பெண்ணை பாப்பநாடு பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20,மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம் பெண் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் மறுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், விசாரணையில் தகவல் அளித்ததார்,இது தொடர்பாக ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என். அழகேசன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தவறிய மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யக்கூடாது. சிகிச்சை அளிக்க ஏன் மறுக்கப்பட்டது என்பது குறித்து வரும் 27ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அப்புசாமி
ஆக 18, 2024 08:45

சிக்கிச்சை அளிப்பதில் பிரச்சனை இல்லை. அதுக்கப்புறம் கோர்ட், சாட்சியம், அப்புறம் பொய் சொல்ல வேண்டிய நெருக்கடி... இந்த எழவெல்லாம் யார் எதிர்கொள்வது?


Ramesh Sargam
ஆக 17, 2024 21:49

நோட்டீஸ், ஸ்டிக்கர், ஜாமீன் இதெல்லாம் நம் நாட்டில் தாராளமாக கிடைக்கும்.


aaruthirumalai
ஆக 17, 2024 20:33

நோட்டிஸ்தான உடுவீங்க நடவடிக்கையா எடுக்க போறீங்க


sankaranarayanan
ஆக 17, 2024 20:05

இப்படிப்பட்ட டாக்டர்களை உடனே பதவியிலிருந்து விலக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகும்


தமிழ்வேள்
ஆக 17, 2024 19:16

அது வேற ஒண்ணும் இல்லீங்கோ.... குற்றம் சாட்ட பட்ட கவிதாசன் சின்னவரு ரசிகர் மன்றத்தில் லோக்கல் தலீவர்.அதனால்தான் போலீசும் ஆஸ்பத்திரியும் பம்மி பதுங்கு து அப்புறம் பாருங்கள்.. அந்த பொண்ணு தான் நாலு ஆண்களை பலாத்காரம் செய்தது ன்னு நடவடிக் கை எடுப்பானுவோ.... திருட்டு திராவிட எடுபட்ட கும்பல்..


J.Isaac
ஆக 17, 2024 18:30

இதற்கு ஐஎம்ஏ வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்குமா?


Indian
ஆக 17, 2024 17:22

இந்த காட்டு மிராண்டி தனம் எல்லாம் வடக்க தான் நடக்கும் என நினைத்தால் , நம் மாநிலத்திலுமா மனித உருவில் மிருகங்கள் ???. பெயர் நாறுவதற்கு முன்னால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் .


Duruvesan
ஆக 17, 2024 17:35

இந்தியனாம் ?


r ravichandran
ஆக 17, 2024 18:20

என்னமோ இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதது போல கருத்து. இது காலம் காலமாக தமிழ் நாட்டில் தொடர்ந்து நடை பெறும் குற்றம் தான். மக்கள் தான் மறதி மன்னர்கள்.


கல்யாணராமன் சு.
ஆக 17, 2024 20:12

ஒரு மாஜி திருட்டு கட்சி MLA வீட்டிலே வேலைக்கு வெச்சிருந்த பெண்ணை மத்தவங்க கூட சேர்ந்து பாலியல் பலாத்காரம் செஞ்சு கொலை பண்ணின விஷயம் கோர்ட்டுக்கு போய் தண்டனை கொடுத்த விஷயம் இந்தியனுக்கு தெரியாது போல .......... பாவம் ....


karthik
ஆக 17, 2024 17:18

பலாத்காரம் செய்த அந்த நாலு பேரை விட இந்த மருத்துவர் மோசமானவர்...தண்டிக்கப்படவேண்டும்


Sivagiri
ஆக 17, 2024 17:11

முக்கால்வாசி டாக்டர் இப்படித்தான் இருக்காங்க . . மோடிஜி , இப்போ இன்ஜினியர்கள் இருக்கிறா மாதிரி ,இன்னும் ஒரு பத்தாயிரம் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சு , தெருவுக்கு பத்து டாக்டர் இருக்கிறா மாதிரி செஞ்சாதான் , இந்த நல்லது ,


Kasimani Baskaran
ஆக 17, 2024 16:40

காட்டுமிராண்டி மருத்துவர் போல தெரிகிறது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி