உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது

மாமனாரை கொன்ற மருமகன் ஆறு மாதங்களுக்கு பின் கைது

அம்மாபேட்டை; தஞ்சாவூரில், மாமனாரை கடத்தி கொலை செய்த மருமகனை, ஆறு மாதங்களுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தை சேர்ந்த சேகர், 65, என்பவரின் மூத்த மகள் ராகினி, 35; தஞ்சையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றினார். இவருக்கும், அந்த ஹோட்டலுக்கு வந்து தங்கி சென்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அரவிந்த் ராவ், 42, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர்.ராகினி குடும்பத்தினர், அரவிந்த் ராவிடம் தகராறு செய்ததில், ஆத்திரமடைந்த அரவிந்த் ராவ், ராகினியின் தங்கை போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.சேகர் குடும்பத்தினர், தஞ்சாவூர் போலீசிலும், அம்மாபேட்டை போலீசிலும் புகார் அளித்தனர். புகார்களை வாபஸ் வாங்க மிரட்டிய அரவிந்த் ராவ், 2024, டிச., 19ல் சேகரை தெலுங்கானாவிற்கு கடத்தி சென்று, கொலை செய்தார். அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, அரவிந்த் ராவை தேடினர். இந்நிலையில், நெடுவாசல் வி.ஏ.ஓ., விவேக் முன், நேற்று முன்தினம் அரவிந்த்ராவ் சரணடைந்தார். போலீசார், அவரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ