மேலும் செய்திகள்
தென்மண்டல கபடி போட்டி பெரியார் பல்கலை முதலிடம்
04-Nov-2025
தஞ்சாவூர்: ஆந்திராவை சேர்ந்தவர் ரத்னா அபினவ், 19. இவர், தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரத்தில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலை கழகத்தில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம், பல்கலை தேர்வின் போது, தேர்வு அறைக்கு ரத்னா அபினவ், மொபைல் போன் எடுத்து சென்றுள்ளார். இதை பறிமுதல் செய்த பேராசிரியர், பல்கலை நிர்வா கத்திற்கு தகவல் அளித்தார். நிர்வாகம் தரப்பில், மாணவரை திட்டி, பெற்றோரை அழைத்து வர சொன்னதாக கூறப்படுகிறது. மனமுடைந்த ரத்னா அபினவ், நேற்று முன்தினம் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். பலத்த காயமடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர், ரத்னா அபினவ்வை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். வல்லம் போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Nov-2025