வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அநியாயப் படுகொலை. அந்த கொலையுண்டவரால் தமிழக டாஸ்மாக்கிற்கு வரவிருந்த லட்சக்கணக்கான ரூ நஷ்டமாகியுள்ளது. கொலை செய அண்ணனை அரசுக்கு நிதி வருவாய் இழப்பு ஏற்படுத்தினார் என்ற பிரிவில் கைது செய்தது மிகவும் சரியே.
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவலஞ்சுழி, கீழமேடு கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 36; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.காளிதாஸ் எப்போதும் குடிபோதையில் ரவுடித்தனம் செய்து வந்தார். இதனால், இருவரும் சில ஆண்டுகளாக பிரிந்து இருந்தனர்.நேற்று காலை காளிதாஸ், தன் வீட்டு வாசலில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். சுவாமிமலை போலீசார், காளிதாஸ் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.கும்பகோணம் அருகே தோன்படுகை நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும், காளிதாஸ் அண்ணன் பாண்டியன், 45, நேற்று முன்தினம் இரவு, தம்பியை கண்டிக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது, போதையில் இருந்த காளிதாஸ், பாண்டியனை தாக்க முயன்றுள்ளார். தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் கிடந்த மரசட்டத்தை எடுத்து அடித்து, கீழே தள்ளி விட்டு, பாண்டியன் வீட்டிற்கு சென்று விட்டார். இதில், அருகில் இருந்த மரசட்டத்தில் காளிதாஸ் தலை அடிப்பட்டு, காயமடைந்து ரத்தம் வெளியேறி இறந்தது தெரியவந்தது. சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று பாண்டியனை கைது செய்தனர்.
அநியாயப் படுகொலை. அந்த கொலையுண்டவரால் தமிழக டாஸ்மாக்கிற்கு வரவிருந்த லட்சக்கணக்கான ரூ நஷ்டமாகியுள்ளது. கொலை செய அண்ணனை அரசுக்கு நிதி வருவாய் இழப்பு ஏற்படுத்தினார் என்ற பிரிவில் கைது செய்தது மிகவும் சரியே.