மேலும் செய்திகள்
கால்நடைத் துறையில் மீண்டும் சம்பள பிரச்னை
05-Sep-2024
ஒரத்தநாடு:தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதுாரில்,மெட்ரிக்குலேஷன் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியையான ரஞ்சிதாவுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில், அவரை பணியில் இருந்து விலக தாளாளர் வற்புறுத்தினார். ரஞ்சிதா பணியில் இருந்து நின்று விட்டார். கடந்த 19ம் தேதி சம்பளம் வழங்குவதாக கூறி, தாளாளர் மாதவன் பள்ளிக்கு வருமாறு ரஞ்சிதாவை அழைத்தார். ரஞ்சிதா தன் கணவர் பிரகாஷ்ராஜ் மற்றும் 3 வயது குழந்தையுடன் பள்ளிக்கு சென்றார். அங்கு, மாதவன், பள்ளி நுழைவு வாயில் அருகே கம்புடன் நின்று கொண்டு, ரஞ்சிதா, அவரது கணவரை அடித்து விரட்டினார். பயந்து போன ரஞ்சிதாவின் சிறு வயது மகன் அழுது கொண்டே ஓடியதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
05-Sep-2024