உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நலத்திட்ட உதவிகள் தஞ்சை கலெக்டர் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் தஞ்சை கலெக்டர் வழங்கல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பழவேரிக்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. முகாமில் நான்கு பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ் தலா ரூபாய் ஆறாயிரம் வீதம், ரூபாய் 24 ஆயிரத்துக்கான காசோலைகளையும், பழவேரிக்காடு கிராமத்தை சேர்ந்த 17 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகள் உட்பட ரூபாய் 96 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கரன் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேரில் வந்து கோரிக்கை மனுக்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருநுஞூது தருகிறார்கள். இம்மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொரு துறைவாரியாக பயாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்துக்கு திங்கட்கிழமைகளில் நேரில் வர இயலாமல் மாவட்டத்தின் தொலைதூரங்களில் இருக்கிற இதுபோன்ற கிராமங்களில் மக்கள் நேர்காணல் முகாம் மாதம் ஒரு நாள் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் அலுவலர்கள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அரசின் நலத்திட்டங்கள் தகுதியானவர்களுக்கு சேருவதுக்கும் பயன்படுகிறது. அண்ணாத்துரை பிறந்த நாளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழைகளுக்கு இலவச கறவை பசு மாடுகளும், வெள்ளாடுகளும் வழங்க இருக்கிறார்கள். மேலும், மிக்ஸி, கிரைன்டர், மின் விசிறி, மாணவர்களுக்கு லேப்டாப் ஆகிய வழங்குவதுக்கும் ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு மாதாந்திரம் உதவித்தொகை ரூபாய் ஆயிரம் என தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் பேசினார். நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிச்சைய்யா, பஞ்சாயத்து தலைவர் குமாரசெல்வம், யூனியன் துணைத்தலைவர் பெரியசாமி, யூனியன் கவுன்சிலர் ஆயி அம்மாள், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் ராமசந்திரன், பிற்பட்டோர் விடுதி தேர்வுக்குழு உறுப்பினர் துரை செந்தில், துணை கலெக்டர்கள் ராதாகிருஷணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), ரவிக்குமார் (முத்திரைத்தாள்), வேளாண் இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், பொது சுகாதாரம் இணை இயக்குனர் டாக்டர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்