உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / காலனி வீட்டின் கூரை இடிந்து 5 பேர் காயம்

காலனி வீட்டின் கூரை இடிந்து 5 பேர் காயம்

பாபநாசம்: பாபநாசம் அருகே தியாகசமுத்திரம் பஞ்சாயத்து புள்ளபூதங்குடி கீழத்தெருவில் வசித்து வருபவர் பிரதாப் (35). இவர் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட காலனி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டு இருந்தபோது காலனி வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில், பிரதாப் மற்றும் அவரது மனைவி விஜி(29), குழந்தைகள் ஹரிகரன், பேபி மற்றும் பிரதாப்பின் உறவினர் பழனிவேல் உள்பட 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உதவி தாசில்தார் சற்குணம், வி.ஏ.ஒ., ராமலிங்கம் ஆகியோர் சென்று விசாரித்து வருகின்றனர். அரசால் கட்டி கொடுக்கப்பட்ட பெரும்பாண்மையான காலனி வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. இவைகள் இடிந்து விழும் முன்பு அதிகாரிகள் பார்வையிட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ