உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஸ்டேஷனில் நிற்காத ரயில்: 1 கி.மீ., சென்று திரும்பியது 

ஸ்டேஷனில் நிற்காத ரயில்: 1 கி.மீ., சென்று திரும்பியது 

தஞ்சாவூர்,:பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில், 1 கி.மீ., துாரம் சென்று, மீண்டும் பின்னோக்கி வந்து பயணியரை ஏற்றிச் சென்றது.மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை தினமும் மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.நேற்று காலை 7:45 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்ட இந்த ரயில், குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம் வழியாக பாபநாசத்திற்கு காலை 8:50 மணிக்கு வந்தது.ரயிலுக்காக, வேலை மற்றும் கல்லுாரிக்கு செல்பவர்கள் ஏராளமானோர் பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர். ஆனால், ரயில் பாபநாசம் ஸ்டேஷனில் நிற்காமல் சென்றது. இதனால் பயணியர் குழப்பமடைந்தனர். ரயில் ஸ்டேஷனில் இருந்து 1 கி.மீ., துாரம் சென்ற நிலையில் நின்றது. ரயில்வே பணியாளர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதற்குள் சுதாரித்த லோகோ பைலட், மீண்டும் ரயிலை பின்னோக்கி இயக்கி, பாபநாசம் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தார். அங்கு காத்திருந்த பயணியர் ஏறிய பின், மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை