உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஆற்றில் மூழ்கி திருநங்கை பலி 

ஆற்றில் மூழ்கி திருநங்கை பலி 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே ஆற்றுச்சுழலில் சிக்கிய திருநங்கை மூச்சுத்திணறி உயிரிழந்தார்.திருச்சி, பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் துளசி, 29; திருநங்கை. இவரது நண்பர்களான திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ரோஷினி பிரியா, 28, திருச்சோற்றுத்துறையை சேர்ந்த ரமேஷ், 31, ஆகியோர், நேற்று முன்தின மாலை, 6:30 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டம், திருச்சோற்றுத்துறை குடமுருட்டி ஆற்று தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, துளசி, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, தண்ணீர் சுழலில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு வீரர்கள், துளசி உடலை மீட்டனர். இது குறித்து நடுக்காவேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை