உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குமுளி போக்குவரத்து டெப்போ லோயர்கேம்பிற்கு மாற்ற சர்வே

குமுளி போக்குவரத்து டெப்போ லோயர்கேம்பிற்கு மாற்ற சர்வே

கூடலூர் : குமுளியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து டெப்போவை, லோயர்கேம்பில் மாற்றுவதற்கான சர்வே பணி நடந்தது. தமிழக கேரள எல்லையான குமுளியில் உள்ள தமிழக பஸ் ஸ்டாண்ட் அடிப்படை வசதியின்றி, பஸ் நிறுத்துவதற்கு கூட இடமின்றி உள்ளது. சபரிமலை சீசன் நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறை, போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குமுளியில் அரசு போக்குவரத்து டெப்போ செயல்பட்டு வந்த இடத்தை பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், டெப்போவை லோயர்கேம்பிற்கு மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, லோயர்கேம்ப் மின்வாரிய ஆய்வாளர் மாளிகைக்கு அருகில், பஸ் டெப்போ அமைப்பதற்கான சர்வே பணி நடந்தது. திண்டுக்கல் போக்குவரத்து பொது மேலாளர் சுப்பையா, நிர்வாக இயக்குனர் சாமிநாதன், மின்வாரிய செயற்பொறியாளர் ஆதிமூலம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை