உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

கொலை மிரட்டல் 5 பேர் மீது வழக்கு

தேனி, : வடவீரநாயக்கன்பட்டி அம்மாபட்டி புதுக்காலனியில் இரு தரப்பினருக்கு இடையே கோழி திருடியது தொடர்பாக ஏப்.,30ல் பிரச்னை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் பரிமளா 36, என்பவர் வீட்டு முன் வள்ளிநகர் உலகநாதன், செந்தில், சூர்யா, மணிபிரகாஷ், அய்யனார் சென்றனர். பரிமளாவை அசிங்கமாக திட்டி, தாக்கினர். வீட்டருகில் நிறுத்தியிருந்த டூவீலர்கள், வீட்டின் கதவு ஜன்னல்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.பரிமளா புகாரில் அல்லிநகரம் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ