உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் தொடர் மின்தடை: மக்கள் அவதி

தேனியில் தொடர் மின்தடை: மக்கள் அவதி

தேனி: மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. தேனியில் மழை பெய்யும் போதெல்லாம் மின்தடை ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. நேற்று மாலை மழை பெய்த போதும், மழை நின்ற பின்பு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்பட்டது. பின் அரைமணிநேரத்திற்கு பின் மின்சாரம் வினியோகம் சீரானது. சில நேரம் குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் மின்சாதனப்பொருட்கள் பாதிக்கும் அபாயமும் எழுந்துள்ளது.மழைநேரத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை