உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உற்பத்தியாளர்களிடம் ஆவின் பால் கொள்முதல் செய்ய மறுப்பு: 1.40 லட்சம் லி., குளிரூட்டும் வசதியால் பயன் இல்லை

உற்பத்தியாளர்களிடம் ஆவின் பால் கொள்முதல் செய்ய மறுப்பு: 1.40 லட்சம் லி., குளிரூட்டும் வசதியால் பயன் இல்லை

தேனி: தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்களில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பால் கொள்முதல் செய்ய வேண்டாம் என ஆவின் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 400க்கும் மேற்பட்ட சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் விவசாயிகள் பலரும் பால்மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவின் நிறுவனம் கடந்த காலங்களில் தினமும் 1.40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தனர். சில மாதங்களுக்கு முன் பால் உற்பத்தி செலவு அதிகரித்த நிலையில் ஆவின் விலை குறைத்து வழங்கியது. தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வழங்கியதால் பலரும் தனியாருக்கு மாறினர்.இதனால் தேனி ஆவின் பால் கொள்முதலில் பெரும் சரிவை சந்தித்து. தற்போது ஆவின் ஊக்க தொகையுடன் லிட்டர் ரூ. 36க்கு கொள்முதல் செய்கிறது.மாவட்டத்தில் கோடை காலம் முடிந்து தொடர் மழையால் பசும்புல் மற்றும் தீவனம் அதிகரித்ததால் பால் உற்பத்தி மள,மளவென உயர்ந்து வருகிறது. தற்போது ஆவினில் தினமும் 60 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. தனியார் பால் விலையை குறைத்துள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கிய உற்பத்தியாளர்கள் திரும்பவும் ஆவினுக்கு பால் வழங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் ஆவின் நிர்வாகம் கூடுதலாக கொள்முதல் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது. தேனி ஆவினில் 1.40 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி இருந்தும் விவசாயிகள் தனியாருக்கு மாறினார்கள் என காரணம் கூறி பால் கொள்முதல் செய்ய மறுப்பது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆவின் உதவி பொது மேலாளர் பாஸ்கர் கூறுகையில், 'விவசாயிகள் பலர் கடந்த மாதங்களில் தனியாருக்கு பால் வழங்கினர். தற்போது ஆவினுக்கு வழங்குவதால் எடுக்க வேண்டாம் என கூறி உள்ளோம்'. என்றார்.ஆவினை விட தனியார் பால் விலை உயர்த்தி வழங்கியதால் பலரும் தனியாருக்கு மாறியது உண்மை என்றாலும் விவசாயிகள் அரசை நம்பிதான் பால்மாடு வளர்ப்பு தொழில் செய்கின்றனர்.மாநிலம் முழுவதும் ஆவினுக்கு பால் தேவை உள்ள நிலையில் ஆவினுக்கு பால் வழங்க வரும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாமல் விரட்டுவது வேதனையானது. எனவே, தேனி மாவட்டத்தில் பால் கொள்முதல் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை