| ADDED : ஆக 01, 2024 05:48 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் ரோட்டின் ஓரங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகள் கடைகள் அகற்றப்பட்டன.பைபாஸ் ரோடு வசதி இல்லாத ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடி, நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக ஆண்டிபட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை இல்லை. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சமீபத்தில் ஆண்டிபட்டியில் ரோட்டின் ஓரங்களில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.விரிவாக்கம் செய்த ரோட்டின் ஓரங்களில் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து விட்டனர். கடைகளுக்கான விளம்பர பலகைகள், பிளக்ஸ் போர்டுகளால் நெருக்கடி மேலும் அதிகமானது. தேனி எஸ்.பி.,சிவப்பிரசாத் உத்தரவில் ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் பேரூராட்சி பணியாளர்கள் ஆண்டிப்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து சக்கம்பட்டி வரை ரோட்டின் ஓரங்களில் இருந்த விளம்பர பலகைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.